வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : கலக்கத்தில் தமிழக மக்கள்..!!

28 November 2020, 1:04 pm
nivar over - updatenews360
Quick Share

நிவர் புயல் கரையை கடந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 21ம் தேதி வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று கரையை கடந்தது. புதுச்சேரி – மரக்காணத்திற்கும் இடையே கரையை கடந்ததால், சென்னை, கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்தது. இந்தப் புயலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், வடமாவட்டங்களில் பெய்த கனமழையால், வெள்ளம் தேங்கி நின்றது. தற்போது, நிவர் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை தமிழக அரசு சீர்செய்து வருகிறது.

இந்த நிலையில், ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நிலைக்கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. தென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும், இந்தக் காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 48 மணி நேரத்தில் புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0

1 thought on “வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை : கலக்கத்தில் தமிழக மக்கள்..!!

Comments are closed.