நாதகவின் சேலம் மாநகர் வீரத்தமிழர் முன்னணி பிரிவின் மாவட்டச் செயலாளர் வைரம் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார்.
சேலம்: நாம் தமிழர் கட்சியில் வீரத்தமிழர் முன்னணி என்ற பிரிவு உள்ளது. இந்த நிலையில், நாதகவின் வீரத்தமிழர் முன்னணி பிரிவின் சேலம் மாவட்டச் செயலாளர் வைரம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
அதேநேரம், தலைவரின் (சீமான்) வழியில் தமிழ் தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும் எனவும் வைரம் குறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு நாம் தமிழர் கட்சியில் விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருச்சி ஆகிய மாவட்டங்களைத் தொடர்ந்து, சேலத்திலும் அதன் நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் அழகாபுரம் தங்கம் என்ற தங்கதுரை அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று (நவ.19) தனது முகநூலில் தெரிவித்து விட்டு விலகிச் சென்றார். இன்று அதே சேலம் மாநகர் மாவட்ட அளவில் வேறு ஒரு அணியின் முக்கிய நிர்வாகி விலகியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மண்டலப் பொறுப்பாளர் பிரபாகரன், திருச்சி மண்டலப் பொறுப்பாளர் பிரபு, விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த அக்டோபரில் விலகினர். அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் சுகுமார், விழுப்புரம் மேற்கு மாவட்டச் செயலாளர் பூபாலன் மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் ஆகியோரும், அவர்களின் ஆதரவாளர்களும் கூண்டோடு கம்பி நீட்டியதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கஸ்தூரி மாதிரி ஜெயிலுக்கு போக ரெடியா இரு… எச்சரிக்கும் பயில்வான் ரங்கநாதன்!
இவ்வாறு அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் நாதகவில் இருந்து விலகுவதற்கான காரணம் குறித்து நாதக நிர்வாகிகள் கூறுகையில், “நாங்கள் பல வருடமாக கட்சியில் இருக்கிறோம். ஆனால், எங்களை அவர் (சீமான்) கட்சியின் ஆலோசனைக் கூட்டங்களில் பேச விடுவதில்லை. எங்களுக்கான மரியாதை கிடைப்பதில்லை” என ஆதங்கத்தைக் கொட்டுகின்றனர்.
மேலும், இவ்வாறு நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முக்கிய நிர்வாகிகள், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், விஜயை சீமான் கடுமையாக விமர்சனம் செய்து வருவதும் நினைவுகூரத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.