தமிழை விட பழமையான மொழி இருக்கு.. நடிகை கங்கனா ரணாவத் கிளப்பிய புதிய சர்ச்சை..!

Author: Rajesh
30 April 2022, 4:32 pm
Quick Share

இந்தியாவுக்கு இணைப்பு மொழி ஹிந்திதான் என அமித் ஷா பேசியதை அடுத்து ரஹ்மான் உள்ளிட்டோர் தமிழ்தான் இணைப்பு மொழி என்றனர். இதனையடுத்து இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதமானது. இந்தியா பன்மொழி மக்கள் வாழும் நாடு அனைவருக்கும் எப்படி ஹிந்தி தேசிய மொழி ஆகும் என பலர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், கங்கனா ரணாவத் கூறியுள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசிய கங்கனா, ‘மொழிவாரியாக வேற்றுமை கொண்டுள்ளது இந்தியா. எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைக்க பொதுவான மொழி ஒன்று தேவை. இந்தி தேசிய மொழியாக்கப்பட்டது. ஆனால் டெக்னிக்கலாக பார்த்தால் இந்தியைவிட தமிழ் பழமையானது. ஆனால் சமஸ்கிருதம் அதனை காட்டிலும் தொன்மையானது.

தமிழ், கன்னடம், குஜராத்தி, இந்தி போன்ற மொழிகளை விட சமஸ்கிருதம் பழமையானது. இந்த மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்திருக்கலாம். பின்னர் ஏன் நமது நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க கூடாது? தேசிய மொழி எது என என்னைக் கேட்டால், அது இந்தி இல்லை, சமஸ்கிருத மொழியாக இருக்கலாம் என நினைக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.

Views: - 776

1

12