எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம் : எஸ்.ஏ சந்திரசேகர் கருத்து!!

24 January 2021, 6:14 pm
SA Chandrasekar- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : எம்.ஜி.ஆரை யார் வேண்டுமானலும் சொந்தம் கொண்டாடலாம் என்று நடிகர் விஜய்யின் தந்தையும் திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் அழகப்பபுரம் அருகே திருமூலநகர் மலை குகை மாதா புனித தோமையார் தேவாலயம் திறப்பு விழா நடைபெற்றது. கலப்பை மக்கள் இயக்க தலைவரும், திரைப்பட இயக்குனருமான பி.டி. செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற தேவாலய திறப்பு விழாவில், திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர் கலந்து கொண்டு புதிய தேவலயத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை புதிய தேவாலயத்தில் முதல் திருப்பலியை நடத்தினார். இவ்விழாவில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், நடிகை பவிடீச்சர் மற்றும் அப் பகுதி ஊர் மக்கள் ஏராளமனோர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்கு முன்னதாக அஞ்சுகிராமத்தில் நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திர சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எம்.ஜி.ஆரை யார் வேண்டுமானலும் சொந்தம் கொண்டாடலாம் என்று கூறிய எஸ்.ஏ. சந்திர சேகர் நான் நல்லவராக இருந்தால் தான் என் வீடு நல்லாயிருக்கும் அதுபோலதான் தலைவர் நல்லவராக இருந்தால் தான் ஊர் ஊர் நல்லாயிருக்கும் இது போலதான் நாடும் என்றும் தமிழர்களுக்கு நல்லதை செய்பவர்கள் தான் ஆட்சியில் வரவேண்டும் என்றும் கூறினார்.

நடிகர் விஜய்க்கு நான் அப்பாவாக , குருவாக, எல்லமாக இருந்தேன் , கீரிடமாக,அவரின் காலில் முள் குத்தாமல் இருக்க செருப்பாக இருந்தேன் .எனக்கு அவர் ஒரே பையன் .அவருடைய நடிகர் கனவை நான் நிறைவேற்றி விட்டேன். ஒரு மகனின் கடமையை நிறைவேற்றுவது தான் ஒரு தந்தையின் கடமை என்றாலும் மதன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல் என கூறினார்.

தொற்று நோயால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா பூரண நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்வேன் என்றும் அவர் கூறினார்.

Views: - 0

0

0