தீர்ப்பு நகலின்றி மேல்முறையீடு : நடிகர் விஜய்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!

22 July 2021, 12:26 pm
Vijay -Updatenews360
Quick Share

சென்னை : சொகுசு கார் வரிவிலக்கு தொடர்பான நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு வழக்கை தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் திரைப்படத்தில் வரும் ரீல் ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் ரீல் ஹீரோவாக இருக்கக்கூடாது என்றும் கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் குறித்த வழக்கில் விஜய் மேல் முறையீடு செய்திருந்தார். அபராதம் விதித்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அளித்த தீர்ப்பின் நகல் இல்லாததால் விஜய்யின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.

இந்த நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பின் நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த கூடுதல் மனு இன்று நீதிபதிகள் எம். துரைசாமி, ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Views: - 212

2

0