தபால் மூலம் வாக்களிக்க வரும் 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு..!!

2 March 2021, 5:57 pm
post vote2 - updatenews360
Quick Share

சென்னை: 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்குகள் செலுத்த வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்குகள் செலுத்த வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

சென்னை மாவட்டத்தில் நேரில் சென்று வாக்களிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளவர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த விருப்பம் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் 12-டி படிவத்தை பூர்த்தி செய்து வரும் 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் சென்று பெற்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அளிப்பார். இந்த படிவம் பெற 5 நாட்களுக்குள் இரு முறை மட்டுமே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு வருவார்கள். அப்போது மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான அரசு சான்றிதழை மாற்றுத்திறனாளிகள் வழங்க வேண்டும்.

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுகாதார அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 10

0

0