கோவை காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

Author: kavin kumar
14 August 2021, 8:29 pm
Quick Share

கோவை: கோவை மாநகர் பகுதியில் காலியாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் புதிதாக இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:- கோவை மாநகர எல்லைக்குட்பட்ட, போலீஸ் ஸ்டேஷன்களுக்கான இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டனர்.கோவை மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக இருந்தன. பல்வேறு வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். தற்போது இவர்கள், பல்வேறு பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த வேல்முருகன் குனியமுத்தூர் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும், மசூதா பேகம் மேற்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், ஆனந்த் எஸ்.ஐ.சி., யாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அருண் சிங்காநல்லூர் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டனர். ராமநாதபுரம், போத்தனுார், ஆர்.எஸ்.புரம் சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர்களாக முறையே செந்தில்குமார், நடேசன், ஆனந்தஜோதியும் நியமிக்கப்பட்டனர். காளீஸ்வரி கோவை மாநகர் எஸ்.ஐ.சி., இன்ஸ்பெக்டராகவும், செந்தில்குமார் வெடிகுண்டு தடுப்புப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டு, அயல்பணியாக சரவணம்பட்டி விசாரணைப் பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டனர். சிங்காநல்லூர், சாய்பாபா காலனி விசாரணைப் பிரிவு இன்ஸ்பெக்டர்களாக முறையே, வினோத்குமார், கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 207

0

0