கோயில் அர்ச்சகர்கள் நியமனம் : இடைக்காலத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2021, 11:55 am
Chennai Hc Order -Updatenews360
Quick Share

கோயில் அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் அறங்காவலர்கள் மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் அர்ச்சகர்களை அறநிலையத்துறை நியமிக்க அதிகாரம் இல்லை எனவும் டிஆர் ரமேஷ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கோயில் அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்படும் அர்ச்சகர்கள் நியமனம் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 228

0

0