நெருங்கும் உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு : வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி.. காரணம் என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
19 September 2021, 1:32 pm
Local Election -Updatenews360
Quick Share

சென்னை : விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபா் 6, 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால், அனைத்து கட்சியினரும் தீவிரமாக வேட்பாளர்களை அறிவிப்பது, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சிப் பதவிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய 3 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் அதிமுக, திமுக கட்சிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கிடையில் இடப்பங்கீடு இதுவரை முடிவு செய்யப்படாமல் இருப்பதால் கட்சித்தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Views: - 166

0

0