மருத்துவமனைகளில் செத்து மடியும் நோயாளிகள்.. ஒரே இரவில் அரக்கோணத்தில் 6 பேர் உயிரிழப்பு

13 May 2021, 12:46 pm
arakkonam GH - updatenews360
Quick Share

ராணிப்பேட்டை : அரக்கோணம் அரசு மருத்துவமனையில் ஒரே இரவில் 6 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோய் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக, சென்னையில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக, படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.

இதனிடையே, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் நேற்றி இரவு கொரோனா அறிகுறிகளுடன் 5 பேர் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர்கள் 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏற்கனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 24 மணிநேரத்தில் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சக நோயாளிகளிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் உயிரிழந்ததற்கான காரணம் என்ன..? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Views: - 129

0

0