ஆரணி பேருராட்சியில் எதை தொட்டாலும் முறைகேடு ; தட்டிக் கேட்ட திமுக கவுன்சிலர் மீது அவதூறு ; விரக்தியில் எடுத்த விபரீத முடிவு..!!

Author: Babu Lakshmanan
18 April 2023, 2:26 pm
Quick Share

பேரூராட்சியில் முறைகேடுகளை தட்டி கேட்டதால் அவதூறு பரப்புவதாகக் கூறி, ஆரணி பேரூராட்சியின் திமுக பெண் கவுன்சிலர் மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் 13-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த பொன்னரசி நிலவழகன். இவர் கடந்த சில நாட்களாக ஆரணி பேரூராட்சியில் முறைகேடு நடப்பதாக, பேரூராட்சி மன்ற கூட்டத்திலும், அதிகாரிகளிடமும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதன் காரணமாக திமுக பெண் கவுன்சிலர் பொன்னரசி மீது பல்வேறு அவதூறுகள் பரப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தன்மீது பழி வாங்கும் நடவடிக்கையாக அவதூறு பரப்புவதால் மன உளைச்சலில் இருந்த திமுக பெண் கவுன்சிலர் பொன்னரசி அதிகளவு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் பெண் கவுன்சிலரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் திமுக பெண் கவுன்சிலர் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரூராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்ட பெண் கவுன்சிலர் மீது அவதூறு பரப்புவதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 321

0

0