ஆரணி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்… வாகனங்களை நிறுத்தி கழுவும் பொதுமக்களின் குசும்பு… எச்சரிக்கும் மாவட்ட நிர்வாகம்..!!

Author: Babu Lakshmanan
3 November 2022, 11:58 am
Quick Share

திருவள்ளூர் : ஆரணி ஆற்றின் குறுக்கே இரண்டு இடங்களில் தரைபால சாலைகள் மூழ்கிய நிலையில், ஆபத்தை உணராத கிராம மக்கள் வெள்ளநீரினை கடந்து செல்வதால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் மற்றும் கனமழை காரணமாக வெள்ள நீர் வந்து கொண்டிருப்பதால் காரணி மங்களம் கிராமங்களில் தரை பாலசாலை இரண்டு இடங்களில் மூழ்கியது. இதனால், புதுப்பாளையம், மங்கலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் பொதுமக்களும் ஆபத்தை உணராமல் வெள்ள நீரை கடந்து செல்கின்றனர்.

arani river - updatenews360

ஆரணி ஆற்றில் வெள்ள நீர் வருவதால் பாலேஸ்வரம், ஏஎன் குப்பம், லட்சுமிபுரம் உள்ளிட்ட தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது. மேலும், ஆரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் வெள்ள நீர் செல்வதால், வழி நெடுகிலும் ஆங்காங்கே நிரம்பி வழிகிறது.

தரைபால சாலைகளிலும், தடுப்பணைகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து செல்வதை
காண்பதற்கும், வாகனங்களை தூய்மை செய்யவும் அதிக அளவில் பொதுமக்கள் வருகின்றனர். அங்கு போதிய காவல்துறையினரையும், தடுப்புகளையும் அமைத்து உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

arani river - updatenews360

இந்த நிலையில், வெள்ள நீர் செல்வதால் ஆரணி ஆற்றின் தரைபால சாலைகளை கடக்க வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Views: - 366

0

0