புதுச்சேரியில் பள்ளிகள் மூடப்படுகிறதா..? தமிழிசை சௌந்தரராஜன் தகவல்!!

Author: kavin kumar
8 January 2022, 2:54 pm
Quick Share

புதுச்சேரி: மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் நேர்ந்தால் புதுச்சேரியில் பள்ளிகள் மூடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 15 – 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி வாண்ரப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் பணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் இளைஞர் தின விழா காணோளி காட்சி வழியாக நடைபெற உள்ளது என்றும், புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும், மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டால் பள்ளிகள் மூடுவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பஞ்சாப் விவகாரம் தொடர்பாக பாஜக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மனு அளித்துள்ளதாகவும், குடியரசு தலைவரின் பிரதிநிதி என்ற அடிப்படையில் தன்னிடம் அளிக்கப்பட்ட மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழிசை தெரிவித்தார்.

Views: - 295

0

0