சந்தைக்கடை போல மாறிய மாமன்றம்… எனக்கே பேச வாய்ப்பு தரமாட்டீங்களா? திமுகவை சேர்ந்த மேயர், துணை மேயர், உறுப்பினருக்குள் வாக்குவாதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2022, 6:42 pm
DMK Mayor Clash -Updatenews360
Quick Share

மாமன்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த மேயர், துணை மேயர், மண்டல குழு தலைவர் ஆகியோருக்கு இடையே நடந்த வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் அசோக்குமார், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 60 வார்டுகளை சேர்ந்த அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதில் மொத்தம் 225 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதல் தீர்மானமாக தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மாநகராட்சி அலுவலக மைய பகுதியில் மார்பளவு வெண்கல சிலை அமைப்பது, மாநகர் முழுவதும் 5 கோடியில் 400 LED விளக்குகள் அமைப்பது சாலைகள் சிறமைப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தங்கள் வார்டுகளில் பணிகள் முறையாக நடைபெறுவதில்லை என்றும், அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வேலூர் புதிய பேருந்து நிலையம் இன்னமும் முழு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை என அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியதால் கூச்சல் நிலவியது.

அதே போல் தனக்கு பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் தனது கேள்விக்கு மேயர் உரிய பதில் அளிக்கவில்லை என ஒன்றாவது மண்டல குழு தலைவர் புஷ்பலதா கேள்வி எழுப்பியதால் மேயர், துணை மேயர், ஒன்றாவது மண்டல குழு தலைவர் என 3 திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. இதனால் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

Views: - 416

0

0