தலைக்கேறிய போதையில் தகராறு.. நண்பனை அரிவாளால் வெட்டிய ஆட்டோ ஓட்டுநர் : கோவையில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2023, 9:56 pm
Cbe Crime -Updatenews360
Quick Share

கோவை துடியலூர் அருகே உள்ள எஸ்.எம். பாளையத்தை சேர்ந்தவர் மாயி என்ற அழகர் சாமி (வயது 24). கூலித் தொழிலாளி. இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோழி என்ற கோபிநாத் (32).

சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே வைத்து மது குடித்தனர். போதையில் தலைக்கேறிய நிலையில் இருந்த போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கோபிநாத் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து அழகர்சாமியின் தலையில் வெட்டினார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அழகர்சாமிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடிபோதையில் தகராறு செய்த நண்பரை வெட்டிய ஆட்டோ டிரைவர் கோபிநாத்தை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Views: - 139

0

0