தபால் ஊழியருக்கு கொரோனா : தலைமை தபால் நிலையம் மூடல்!!
20 August 2020, 3:44 pmஅரியலூர் : தபால்காரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தலைமை தபால் நிலையம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது.
அரியலூர் மாவட்ட தலைமை தபால் நிலையத்தில் பணியாளர்கள் தபால்காரர்கள் என 30-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் தலைமை தபால் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் தபால்காரர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் தலைமை தபால் நிலையம் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளது.
மேலும் நகராட்சி ஊழியர்கள் தபால் அலுவலகத்தை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர் பணியில் இருந்தபோது ரயில் நிலையம், மாவட்ட அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தபால் கொடுப்பதற்காக சென்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.