4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.., 3 சிறுவர்கள் மீது வழக்கு..!

15 July 2021, 4:34 pm
Quick Share

அரியலூர்: திருமானூர் அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள பாக்கியநாதபுரம் கிராமத்தில் விளையாடி கொண்டிருந்த போது 4 வயது சிறுமிக்கு உடன் விளையாண்ட சிறுவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து பிறப்பு உறுப்பில் புளியங்கொட்டை வைத்து முத்தம் கொடுத்துள்ளனர். இதனால் சிறுமிக்கு இரவில் வலி ஏற்பட்டுள்ளது. ஏன் எப்படி என்று விசாரித்ததில் 7 மற்றும் 9 வயதான சிறுவர்கள் விளையாடிய போது செய்த விஷயங்களை சிறுமி அம்மாவிடம் கூறியுள்ளார். உடனே சிறுமியை சிகிச்சைக்காக லால்குடி மருத்துவமணைக்கு அழைத்து சென்றனர்.

சிறுமியின் தாய் கொடுத்த புகாரை அடுத்து 7 மற்றும்‌ 9 வயதான 3 சிறுவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் அரியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற் கொண்டுள்ளனர். சிறுவர்கள் செய்த தவறை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது என்பதால் பெண் குழந்தைகள் பெற்ற பெற்றோர் அவர்களை தினமும் பத்திரமாக பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்ற முக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமுதாய சீர்கேடு பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கு மனதில் இடிவிழுந்த நிலையே ஆகும்.

Views: - 194

0

0