செல்போனில் பாலியல் தொந்தரவு… அலட்சியம் காட்டிய போலீஸார் : விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி..!!

Author: Babu Lakshmanan
19 October 2021, 12:36 pm
ariyalur suicide - updatenews360
Quick Share

அரியலூர் அருகே பள்ளி மாணவிக்கு குறுந்தசவல் மற்றும் ஆபாச புகைப்படங்களை காட்டி மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம் இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இரண்டாவது மகளான பூஜா அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடுகூர் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர், சிறுமிக்கு ஆபாச குறுந்தகவல் மற்றும் போன் செய்தும் ஆபாச வார்த்தைகளால் கிண்டல் செய்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதையடுத்து பெற்றோர் கயர்லாபாத் காவல்நிலையத்தில் 8 பேர் மீது புகார் செய்தனர். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட பலருக்கும் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சிறுமிக்கு ஆபாசப் புகைப்படங்களை காட்டி மிரட்டி மீண்டும் மிரட்டியுள்ளனர்.

இதனை தட்டிக்கேட்ட பூஜாவின் தந்தை மற்றும் பூஜாவையும் மிரட்டி கட்டைகளால் தாக்கியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த சிறுமி, நேற்று இரவு விஷ மருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் சிகிச்சைக்காக சிறுமியை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தனது மகளின் தற்கொலைக்கு காவல்துறை தான் காரணம் என்றும், காவல்துறையில் புகார் அளித்தபோது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த முடிவிற்கு பள்ளி மாணவி சென்றிருக்க மாட்டார் எனக் கூறி அண்ணா சிலை அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Views: - 309

1

0