கொங்குநாடு மட்டுமல்ல… தமிழகத்தை மொத்தம் 3 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் : அர்ஜுன் சம்பத்தின் பலே ஐடியா..!!

16 July 2021, 4:46 pm
arjun sambath - updatenews360
Quick Share

திருவள்ளூர் : தமிழகத்தை மூன்று மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்

பெட்ரோல் டீசல் விலை குறைப்பு தேர்தல் வெற்றிக்கான திமுகவின் ஏமாற்று வேலை என்றும் கல்வி வளர்ச்சி நாளாக காமராஜரின் பிறந்த நாளை அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் முறையாக கடைபிடிக்காதது வருத்தமளிப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் கோவில்கும்பாபிஷேக விழாவில் கலந்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- ஆடி மாதத்தில் அனைத்து கோவில்களையும் இந்துசமயஅறநிலைத்துறை திறக்க வேண்டும். ஆடி மாத கூழ் வழங்க அனைத்து கோவில்களுக்கும் தானியங்களை வழங்க இந்துசமயஅறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் அன்னதான திட்டத்தை கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்படுத்தியதை போன்று செய்யவேண்டும் .

காமராஜர் பிறந்தநாள் விழா அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் முறையாக நடைபெறவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

கொங்கு நாடு கோரிக்கை 20 ஆண்டுகளாக வைக்கப்படும் கோரிக்கையாகும். வளர்ச்சி முன்னேற்றம் அடிப்படையாகக் கொண்ட கோரிக்கை இது. தமிழகத்தை மூன்றாக பிரித்து மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும். சிறிய மாநிலமாக இருந்தால் நிர்வாகம் செய்ய வசதியாக இருக்கும். மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் முதல்வர் செயல்படவேண்டும். அனைத்து மக்களையும் ஒரே மாதிரியாக பார்க்க வேண்டும்.

பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் பெட்ரோல் 60 ரூபாய்க்கு கிடைக்கும். ஜிஎஸ்டி வரம்புக்குள் வராததற்கு காரணம் திமுகவும் காங்கிரசும் தான். பாஜக தலைவராக பொறுப்பெடுத்த அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். அவர் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கோவில் சொத்துக்களை ஆவணப்படுத்தும் செயல் சிறப்பானது. திருடுபோன சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு உரிய அதிகாரங்களை வழங்கி சிலைகள் மீட்கப்பட்டு, வழிபாட்டிற்காக பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டவர்கள், இந்திய தேசிய முழக்கத்தை அவமதிக்கும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது, என அவர் தெரிவித்தார்.

Views: - 208

0

0