திராவிட மாடலை ஓரங்கட்டி தேசிய மாடலை அண்ணாமலை கொண்டு வருவார் என்று இந்து மக்கள் கட்சியன் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தேசிய சிந்தனை பேரவையின் சார்பில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற இந்து தலைவர்கள் கூட்டமைப்பின் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பொது சிவில் சட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். இது அம்பேத்கருடைய கொள்கை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே அண்ணாவின் கொள்கை என்பதால் பொது சிவில் சட்டத்தை திமுகவும் ஆதரிக்க வேண்டும்.
சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடும் இந்து அமைப்பினரை திமுக அரசு பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து கொடுமை செய்து வருகிறது. அதே சமயத்தில், தர்மபுரி பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், இந்து தெய்வத்தை பற்றி அவதூறாக பேசி இந்துக்களின் மனதை புண்படுத்தி உள்ளார். அவரை கண்டித்து பல்வேறு ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும்.
காலை 7 மணிக்கே டாஸ்மாக் கடை திறக்கலாமா என்ற கருத்துகள் சென்று கொண்டிருக்கிறது. தமிழகம் போதைப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தும் மாநிலமாக மாறி வருகிறது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அம்மன் கோயில்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐந்தாயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்.
அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து துவக்கக்கூடிய நடைபயணம் திராவிட மாடலை மாற்றி தேசிய மாடல் ஆக்கக்கூடிய மாற்றத்தை கொண்டு வரும் என நம்புவதாக தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.