திருச்சியில் ஆயுதப்படை காவலர் தற்கொலை : துப்பாக்கி சுமக்க பயன்படுத்தும் துணி பட்டையில் தூக்கு போட்ட சோகம்!!

6 November 2020, 5:56 pm
Trichy Suicide - Updatenews360
Quick Share

திருச்சி : லால்குடி அருகே சொத்துப் பிரச்சனையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்து கொண்டம் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்துள்ள நத்தமாங்குடியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(வயது 26). கடந்த 2017ம் ஆண்டு முதல் திருச்சி மாநகர ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 10 நாட்களாக உடல்நிலை சரியில்லை என கூறி இவர் மருத்துவ விடுப்பில் எடுத்துள்ளார்.

நேற்று அவர் பணிக்கு வரவேண்டும், ஆனால் நவநீதகிருஷ்ணன் பணிக்கு வரவில்லை. அவர் வராததால் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, துப்பாக்கியை தோளில் சுமக்க பயன்படுத்தப்படும் துணி பட்டையை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதர்ச்சியடைந்த சக காவலர்கள் இது குறித்து கே.கே. நகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முதல் கட்ட விசாரணையில் நவநீதகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் அவரது தாய்மாமன் செல்வராஜ் மற்றும் கெவின்ராஜ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது. நவநீதகிருஷ்ணன் வீட்டுக்கு செல்வதற்கு 3 அடி பாதை தொடர்பான பிரச்சினை கடந்த 15ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தான் நவநீதகிருஷ்ணன் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொண்டு மேற்படி இரண்டு நபர்களுடன் பிரச்சினையைத் பேசி தீர்ப்பதற்காக சென்றுள்ளார். ஆனால் கடந்த 10நாட்களாக பேசுவதாக கூறிய
தாய்மாமன் செல்வராஜ் மற்றும் கெவின்ராஜ் இருவரும் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது.

எனவே மனம் வெறுத்து போன நவநீதகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 13

0

0