வாழைப்பழம் விற்ற மூதாட்டியிடம் குடிபோதையில் ஆயுதப்படை காவலர்கள் தகராறு : போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2021, 1:47 pm
Saelm Issue -Updatenews360
Quick Share

சேலம் : வாழைப்பழ வியாபாரியிடம் குறைந்த விலைக்கு பழம் கேட்டு தகராறில் ஈடுபட்ட 2 பயிற்சி காவலர்கள் குடிபோதையில் பழம் விற்ற மூதாட்டியை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாநகர பகுதியான வின்சென்ட் பகுதியில் உள்ளது எல்லைப்பிடாரி மாரியம்மன் கோவில் கோவில் வளாகம் அருகே 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாழைப்பழம் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சேலம் ஆயுதப்படை வளாகத்தில் சேர்ந்த பயிற்சி காவலர்கள் இரண்டு பேர் மூதாட்டியிடம் வாழைப்பழம் கேட்டுள்ளனர். அதற்கு அவரும் வாழைப்பழம் கொடுத்துள்ளார்.

பின்னர் பழத்திற்கு பணம் கேட்டுள்ளார். இரண்டு பேரும் கேட்கும் பணம் கொடுக்க முடியாது பழம் நன்றாக இல்லை நாங்கள் கொடுப்பதை வாங்கிக் கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். அதற்கு மூதாட்டி சாப்பிட்ட பழத்திற்கு பழம் கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.

உடனே அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கடையில் வைத்திருந்த பழங்களை கீழே தள்ளிவிட்டு மூதாட்டியை அடித்ததாக தெரிகிறது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இரண்டு பயிற்சி காவலர்களையும் பிடித்தனர். அதில் ஒருவர் அங்கிருந்து அவர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடி விட்டார்.

மற்றொருவரையும் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தையும் அப்பகுதி மக்கள் பிடித்து சேலம் அஸ்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த காவலர்கள் மூதாட்டியும் அப்பகுதி மக்களையும் சமாதானப்படுத்தினர்.

தொடர்ந்து நடந்த சம்பவம் தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 67

0

0