நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்: மதுரைக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி

Author: Udayaraman
24 July 2021, 10:41 pm
Quick Share

மதுரை: அசாமில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் மதுரைக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி இவரது மகன் கதிர்வேல். இவருக்கு திருமணமாகி சண்முகப்பிரியா என்ற மனைவியும், ஹனிஸ்க் மற்றும் பார்த்திவ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கதிர்வேல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அசாமில் மழையில் பணியில் இருந்தபோது ஏற்பட்ட நிலச்சரிவில் கதிர்வேல் மரணமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ராணுவ அதிகாரிகள் அவரது உடலை மீட்டு அசாம் தலைமையகத்துக்கொண்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வந்து சென்னையிலிருந்து மதுரை திண்டுக்கல் கொண்டு வரப்பட்டது.

மதுரை தேசிய மாணவர் படை சுபேதார் பிரமோத் சார்பில் தேசிய கொடி பொருத்தப்பட்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் அணி சேகர், மதுரை மாநகர் காவல் துணைஆணையர் துரை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மதுரை விமான நிலையத்தினர் பாபுராஜ், விமான நிலையம் மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன், துணை கமாண்டன்ட் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கதிர்வேல் உடல் மதுரை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கொண்டு செல்லப்பட்டது.

Views: - 215

0

0