சொத்து தகராறு: அண்ணனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பி கைது

20 July 2021, 7:33 pm
Quick Share

தருமபுரி: பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் அண்ணனை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற தம்பியை போலீசார் தேடி கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயியான பரசுராமன் என்பவருக்கு ராஜா மற்றும் அம்மாசி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜாவுக்கும் தம்பி அம்மாசிக்கும் பொது வழிப்பாதை தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக நிலத் தகராறு இருந்து வந்துள்னது. இந்நிலையில் அம்மாசி தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு வந்த அண்ணன் ராஜா, தம்பி அம்மாசியிடம் நிலப் பிரச்சினை தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ராஜாவின் தலையில் அம்மாசி மண்வெட்டியால் அடித்து தாக்கி உள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே ராஜா இறந்துவிட்டார்.

இதனையடுத்து அண்ணன் இறந்து விட்டதையறிந்த அம்மாசி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாப்பாரப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மண்வெட்டியால் அடித்துக்கொலை செய்யப்பட்ட ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தம்பி அம்மாசியை தேடி வந்தனர். இந்நிலையில் அம்மாசியை இன்று கைது செய்தனர். தம்பி அண்ணனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 107

0

0