வாய்ச்சவடால் எல்லாம் இல்ல… முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் : திமுகவுக்கு அண்ணாமலை சவால்…!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2022, 6:46 pm
Annamalai Challenge - Updatenews360
Quick Share

கடந்த 24ஆம் தேதி திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி பகுதியில் பாஜக மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பால்ராஜ் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கு சில மர்ம நபர்கள் தீவைத்து எரித்தனர்.

தீ விபத்து நடந்த இடத்தினை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியின் மீது உள்ள காழ்ப் புணர்ச்சி காரணமாக இது போன்ற தீ வைப்பு சம்பவங்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினரின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. திண்டுக்கல்லில் நடந்த தீ வைப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதில் தொடர்புடைய மற்ற நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தொடர் போராட்டம் காரணமாக ஆங்காங்கே நடைபெற்ற தீவைப்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், உங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பியதற்கு, முடிந்தால் கைது செய்யட்டும் என கூறினார்.

Views: - 572

2

0