தமிழ் சினிமாவை 48 வருடங்களாக கோலோச்சி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி . தனது ஸ்டைல் மற்றும் நடிப்பால் பல கோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரர். 70 வயதானாலும் சினிமாவில் வெற்றியை ருசித்து வரும் ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல துன்பங்கள் நெருடி வருகிறது.
இளைய மகள் சௌந்தர்யாவின் வாழ்க்கையால் சந்தோஷத்தை இழந்த ரஜினி, முதல் கணவரை பிரிந்த சௌந்தர்யாவுக்கு இரண்டாவதாக நல்ல வரன் அமைந்ததால் சற்று நிம்மதியடைந்தார். ஆனால் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் பிரிவால் மீண்டும் நிம்மதியை இழந்துள்ளார் ரஜினி.
நன்றாக சென்ற ஐஸ்வர்யா தனுஷ் வாழ்க்கையில் இடையில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. ஆனால் எல்லாவற்றையும் ரஜினி சமாளித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகளை ரஜினி பேசி சமாதானம் செய்தார்.
இந்த நிலையில் இருவரின் பிரிவு வெறும் தற்காலிகமே என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அண்மையில் பேட்டியளித்திருந்தார். இந்த நிலையில் இருவரிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை பேசியும் இருவரும் பிடிகொடுக்கவில்லை.
சரி நாட்கள் உருண்டோட எல்லாம் சரியாகிவிடும் என கஸ்தூரி ராஜா காத்திருந்து வருகிறார். ரஜினி சம்மந்தி என்ற பெரிய அந்தஸ்தில் உள்ள கஸ்தூரி ராஜா, ரஜினி குடும்பத்திற்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறார்.
இதனால் அவ்வப்போது தனுஷ்க்கு போன் செய்து ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் படி அறிவுறுத்தி வருகிறார். ஆனால் அவர் சரி சரி என சொல்லிவிட்டு இதைபற்றி எதுவும் கண்டுகொள்ளாமல் தனது படப்பிடிப்பில் பிசியாக உள்ளதாக கூறப்படுகிறது.
எத்தனை தடவ சொன்னாலும் மகன் பிடி கொடுக்க மாட்டிங்கிறானே என்ற வருத்தத்தில் உள்ளாராம் கஸ்தூரி ராஜா. தற்போது மாறன் படத்திற்காக மெனக்கெட்டு வரும் தனுஷிடம் கஸ்தூரி ராஜா பேசியுள்ளதாகவும், மகன்களுக்காக இருவரும் மீண்டும் சேர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவர் விரைவில் வீட்டுக்கு வருகிறேன் என்றும், நல்ல முடிவு கூறுவதாக தனுஷ் சொல்லிவிட்டு போனை கட் செய்துள்ளார்.
இதனால் இந்த முறை மகன் நிச்சயம் சேர சம்மதம் கொடுத்துவிடுவான் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறாராம் கஸ்தூரி ராஜா. எது எப்படியோ இவர்கள் சேர்ந்தால் போதும் என அவர்களது நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.