தமிழகத்தில் 2026ம் ஆண்டுக்கு முன்னரே சட்டமன்ற தேர்தல் வரலாம் : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2021, 7:39 pm
Sellur Raju- Updatenews360
Quick Share

மதுரை : 2026 ஆம் ஆண்டிற்கு முன்னரே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம் என்றும், அப்போது அதிமுக ஆட்சிக்கு வரும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அண்ணா தொழிற்சங்க மதுரை மண்டலத்திற்கான மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான வேட்புமனு தாக்கல் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் தொடங்கியது.

இதில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜு, மற்றும் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா மற்றும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் உட்பட மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் கமலக்கண்ணன் உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவினர் தங்களுடைய திமுக கரை வேஷ்டியை பெட்டியில் வைத்து பூட்டி விட்டார்கள்.அதிமுகவை கருணாநிதியாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை என கூறிய அவர், நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையை விளம்பரத்துக்காக வெளியிட்டு இருக்கிறார். வெள்ளை அறிக்கையை வெடி குண்டு என நினைத்து வெளியிட்டார்கள் ஆனால் அது புஷ்வானமாகிவிட்டது என விமர்சித்தார்.

2026 ஆம் ஆண்டிற்கு முன்னரே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம். அப்போது அதிமுக ஆட்சிக்கு வரும் என பேசினார்.

Views: - 317

0

0