சட்டசபை கூட்டத்திற்கு தயாராகிறதா கலைவாணர் அரங்கம்..? சபாநாயகர் நேரில் ஆய்வு

22 August 2020, 12:29 pm
EPS in assembly 1 - updatenews360
Quick Share

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தை நடத்துவதற்காக, அங்கு சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தும், அவ்வப்போது அதிகரித்தும் வருகிறது. இதனால், சில தளர்வுகளுடன் 7வது கட்ட ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கொரோனா வைரஸால் ஒத்தி வைக்கப்பட்ட சட்டசபை கூட்டத் தொடரை செப்., 24ம் தேதிக்குள் மீண்டும் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

சமூக இடைவெளியுடன் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்பதால், தலைமை செயலகத்தில் போதிய இடவசதியில்லாததால், வேறு இடத்தில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தை நடத்தலாமா என சபாநாயகர் தனபால் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Views: - 10

0

0