சென்னை ; சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியினை வரும் 30ம் தேதிக்குள் செலுத்துமாறு சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும், சொத்துவரி சீராய்வு மேற்கொள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறப்பட்ட ஆட்சேபணைகள், கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு மன்றத் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள இனங்களின் அடிப்படையில், 2022-23ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டு முதலே சொத்துவரி பொது சீராய்வானது மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சொத்துவரி பொது சீராய்வு அறிவிப்புகள் தபால் துறை மூலமாக, சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு சார்வு செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை சுமார் 158,079 சொத்து உரிமையாளர்களுக்கு சொத்துவரி சீராய்வு அறிவிப்புகள் சார்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், பொது சொத்துவரி சீராய்வின் தொடர்ச்சியாக இதுவரை 5.75 லட்சம் சொத்து உரிமையாளர்கள் ரூ.472.88 கோடி சொத்துவரியை செலுத்தியுள்ளனர்
சொத்து உரிமையாளர்கள் சொத்துவரி சீராய்வின்படி, நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி
தொடர்பான, கணக்கீட்டு முறையை அறிய எதுவாக, ஏற்கனவே பெருநகர சென்னை
மாநகராட்சியின் இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் முதலிய விவரங்களை பதிவு செய்து கணக்கீட்டு விவரத்தினை அறிந்து கொள்ளலாம்.
தற்போது, சொத்துவரி பொது சீராய்வின்படி, குறிப்பிட்ட தெருவிற்கு சதுர அடி
அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி விவரம் அறிய, பெருநகர சென்னை
மாநகராட்சியின் இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரி விவரத்தினை அறிந்து கொள்ளலாம்.
மேலும், சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி தொடர்பாக
எழும் சந்தேகங்கள் மற்றும் கணக்கீட்டு விவரம் குறித்து தெளிவு பெற, பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தனி முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி தொடர்பான, சந்தேகங்கள்,
கணக்கீட்டு விவரம் ஆகியவை குறித்து தெளிவு பெற, மாநகராட்சியின் மண்டலங்களில் அமைந்துள்ள முகப்புகளில் பணியாற்றும் பணியாளர்களிடம் நேரில் சென்று, தங்களது சொத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரி சூறித்த விவரத்தினை அறிந்து கொள்ளலாம்.
மேலும், சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை கீழ்க்கண்ட வழிமுறைகளில்
எதேனும் ஒரு முறையை பின்பற்றி செலுத்தலாம்.
எனவே, சொத்து உரிமையாளர்கள் பெருநகா சென்னை மாநகராட்சிக்கு செலுத்த
வேண்டிய சொத்துவரியினை வருகிற 30.09.2022க்குள் செலுத்தி, வட்டி விதிப்பினை
தவிர்க்குமாறும், பெருநகர சென்னை மாநகராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.