காவல் உதவி ஆய்வாளர் மூச்சுத்திணறலால் உயிரிழப்பு.!!

29 August 2020, 1:23 pm
Quick Share

கோவை :கோவையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மூச்சுத்திணறலால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பாலசுப்பிரமணியம் (52).

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலசுப்பிரமணியம் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது அவருக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து சக போலீசார் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

உதவி ஆய்வாளர் ஒருவர் மூச்சுத்திணறலால் பலியாகியுள்ள சம்பவம் சக போலீசாரை பீதிக்கு உள்ளாக்கியுள்ளது.

Views: - 33

0

0