‘எனக்கு போனஸ் வேணும்‘ : துணிக்கடையில் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் கைது!!

7 November 2020, 10:48 am
Bribery - Updatenews360
Quick Share

கரூர் : தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் தீபாவளி போனஸ் என்ற பெயரில் 29,100 ரூபாய் லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டம் வெண்ணைமலை பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் பழனிச்சாமியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். இந்த நிலையில் பழனிச்சாமியின் பைக்கில் மறைத்து வைத்திருந்த 20,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அவருக்கு உதவியாக இருந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலக உதவியாளர் ராமனிடம் இருந்து 8,600 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ரெமென்ஸ் துணிக்கடை உரிமையாளர்களை மிரட்டி, லஞ்சமாக வாங்கிய ரூ.7,500 மதிப்புள்ள துணிகளும் பறிமுதல் செய்தனர். கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நடராஜன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு, போனஸ் என்ற பெயரில் லஞ்சம் வசூலிக்கப்படுவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Views: - 25

0

0