ஒரே நேரத்தில் இரண்டு உதவி பொறியாளர் வீட்டில் கணக்கில் வராத ரூ.35 லட்சம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 July 2022, 9:12 pm
Bribery - Updatenews360
Quick Share

திருச்சி : உதவி செயற் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது 31 லட்சம் கைப்பற்றிய நிலையில் மற்றொரு உதவிப்பொறியாளரும் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுனர்.

இந்த சோதனையின் போது உதவி பொறியாளர் கந்தசாமியிடம் கணக்கில் வராத சுமார் 31 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் பணி செய்யும் ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் உதவி செயற்பொறியாளர் கந்தசாமியை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து திருச்சி திருவானைக்காவல் உள்ள கந்தசாமி வீட்டில் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மற்றொரு உதவி செயற்பொறியாளரான மணிகுமார் என்பவர் வீட்டில் சோதனை போது ரூபாய் 4 லட்சம் கைப்பற்றதாக கூறப்படுகிறது. அவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் இரண்டு உதவி செயற் பொறியாளர்கள் லஞ்ச ஒழிப்பு தொழில் சிக்கியது ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 482

0

0