”பல நாள் திருடன்… மாட்டிக்கிட்டான்” : பைக் திருட்டில் சிக்கிய ஏடிஎம் கொள்ளையன்!!

4 February 2021, 4:16 pm
Madurai Robber - Updatenews360
Quick Share

மதுரை : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் மதுரையில் பல்வேறு பகுதிகளில் தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட போது பிடிப்பட்டான்.

மதுரை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட கற்பகம் நகர், அழகர் நகர், உத்தங்குடி, வளர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டு நடைபெற்று வந்த நிலையில் அவர்களை பிடிக்க மாநகர காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில் சர்வேயர் காலனி அருகே இளைஞர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை போலீசாரை கண்டதும் நிறுத்தாமல் வேகமாக சென்றார்.

அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் மதுரை, திருப்பரங்குன்றம் அருகே உள்ள நல்லூர் நடுத்தெருவை சேர்ந்த சர்க்கரை பீர் மகன் இத்ரீஸ் என்பதும் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் இவர்தான் என தெரிய வந்தது. இதனையடுத்து அவர் திருடிய ரூ 5 லட்சம் மதிப்புள்ள 6 இரு சக்கர வாகனங்களை போலீசார் கைப்பற்றினர்.

அதோடு 04-12-2020 அன்று ராமநாதபுரம் சாலை தெரு, சர்ச் அருகே KVB ATM அறைக்குள் நுழைந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டியை அடித்து உதைத்து ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்ததும் இவர் தான் என தெரியவந்தது. அந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் இவர்தான் என்பது தெரியவந்தது..

இதனையடுத்து இத்ரீஸ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பல மாதங்களாக தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த திருடனை பிடித்த தனிப்படையினருக்கு காவல்துறை ஆணையாளர் பாராட்டு தெரிவித்தார்.

Views: - 0

0

0