ATMல் பணம் எடுக்க இனி செல்போன் அவசியம்..! ஏன் தெரியுமா..?

16 September 2020, 11:27 am
atm - updatenews360
Quick Share

ஏ.டி.எம்மில் பணம் எடுக்கச் செல்லும் வாடிக்கையாளர்கள், பணம் எடுக்கும் போது இனி செல்போனை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

நவீன காலத்திற்கு நாம் முன்னேறி செல்லும் போது, கெள்ளையர்களும் தங்களின் யுக்திகளை மேம்படுத்தி வருகின்றனர். உதாரணமாக, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறும் போது, பொதுமக்களின் ஏடிஎம் பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களைப் பெற்று மோசடி செய்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே, தங்களது வாடிக்கையாளர்கள் ஏமாறமல் இருக்க தேவையான பல்வேறு நடவடிக்கைகளை வங்கி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது செல்போனுக்கு வரும் OTP-யை பயன்படுத்தினால் மட்டுமே இனி பணத்தை எடுக்கும் வகையிலான முறையை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேல் பணத்தை எடுப்பவர்களுக்கு மட்டுமே இந்த OTP நடைமுறை பின்பற்றப்படுகிறது. நாடு முழுவதும் வரும் 18ம் தேதி முதல் அனைத்து எஸ்.பி.ஐ. ஏடிஎம்களில் இந்த முறை அமலுக்கு வருகிறது. எனவே, இனி ஏ.டி.எம்.மிற்கு செல்பவர்கள் செல்போனை அவசியம் கையில் எடுத்துச் செல்ல வேண்டும்.

எஸ்.பி.ஐ.யின் இந்த புதிய திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply