கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க ஒப்புதல்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

Author: kavin kumar
30 September 2021, 11:05 pm
Quick Share

கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் ஏற்கனெவே 100க்கும் மேற்பட்ட முறை உற்பத்தி நிறுத்தப்பட்டு மோசமான முறையில் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணுவுலைகள் இயங்கி வருகின்றன. அதே வளாகத்திற்குள் தற்போது மேலும் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு அணுவுலைகள் அமைக்கும் பணியை தேசிய அணுமின் சக்திக் கழகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 3 மற்றும் 4 அணுவுலைகள் செயல்படத் தொடங்கியதும் அவற்றிலிருந்து உண்டாகும் அணுக் கழிவுகளையும் கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே சேமித்து வைப்பதற்கான இடத்தேர்வு அனுமதியை வழங்கியுள்ளது. இதற்கு அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 185

0

0