பெற்றோரை நம்பி சென்ற காதல்ஜோடி மீது கொலைவெறி தாக்குதல் – புதுமாப்பிள்ளைக்கு மருத்துவமனையில் சிகிச்சை

By: Aarthi
3 October 2020, 5:33 pm
erode lovers attck - updatenews360
Quick Share

ஈரோடு மாவட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியினர் மீது பெண் வீட்டார் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே ஔவையார் பாளையத்தை சேர்ந்தவர் அசோக், இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இவர் கல்லூரியில் உடன் படித்த பெண்ணை சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் பெண்ணின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் இருவரும் அசோக் வீட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். இந்நிலையில் பெண் வீட்டார் கணவன்-மனைவி இருவரையும் விருந்துக்கு அழைத்துள்ளனர்.

பெற்றோரின் பேச்சை நம்பிய புதுமணத் தம்பதியினர், அசோக்கின் தம்பி மற்றும் நண்பர்களுடன் காரில் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருந்த 10க்கும் மேற்பட்ட அடியாட்களை கணவன், மனைவி, நண்பர்களை அரிவாள் மற்றும் ஆயுதங்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பலத்த காயங்களுடன் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் கோபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து தனது மனைவியை மீட்டு தருமாறு கோபிச்செட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மாற்று சமூகத்தை சேர்ந்த இருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், பெண்ணின் பெற்றோரே கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 44

0

0