படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை தட்டி கட்ட நடத்துநர் மீது கல்வீசி தாக்குதல் : அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் திடீர் மறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 December 2021, 6:57 pm
chennai Bus Drivers Strike -Updatenews360
Quick Share

சென்னை : ஓட்டேரியில் , பேருந்து நடத்துனர் மீது மாணவர்கள் கற்களை எறிந்ததால் பேருந்தை பாதியில் நிறுத்தி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூர்க்கு மாநகரப் பேருந்து 29A தடம் எண் கொண்ட பேருந்து வந்து கொண்டிருந்தது. புரசைவாக்கம் மற்றும் டவுட்டன் பகுதியில் ஏறிய ஏராளமான பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கிய படியும் , கூரை மீது ஏறியும் , சாலையில் கால்களை தேய்த்த படி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

இதை கண்டக்டர் தட்டி கேட்டதால் மாணவர்கள் தொடர்ந்து பயணிகள் மற்றும் கண்டக்டரை கிண்டல் செய்தவாறு பயணத்தை தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் மாணவர்களின் அத்துமீறல்களை கண்டக்டர் எச்சரித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கீழே இருந்த கற்களை எடுத்து கண்டக்டரை நோக்கி அடித்து விட்டு தப்பித்து ஓடினர். இதில் கண்டக்டர் மற்றும் பெண் பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.

இதை கண்ட மற்ற பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் கண்டக்டர்கள் மாணவர்களை கண்டிக்கும் வகையில் ஆங்காங்கே பேருந்தை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேருந்து ஓட்டுநர் கண்டக்டர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைக்க முயன்றனர். பள்ளி மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வரையில் போராட்டம் தொடரும் என போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை வைத்து தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ததால் ஓட்டேரி பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு கடும் நெரிசலை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 310

0

0