தமிழகம் முழுவதும் மக்களுடைய கோரிக்கை மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கை மனுக்களை வழங்கி அதற்கான தீர்வு கண்டு வருகின்றனர்..
அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் கிராமத்தில் இன்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் உப்புபேட்டை கணபதி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடாபதி (60) என்பவர் தன்னுடைய கோரிக்கை மனு மீதான நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது கொடுக்கப்பட்ட புகார் மனுவின் மீது உரிய ரசீது வழங்க வேண்டுமென துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததாகவும் அப்போது அங்கு பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் ஷாபுதீன், முதியவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தீயே தள்ளிவிட்டதாக தெரிகிறது.
இதில் முதியவர் வெங்கடாபதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது..
இதனையடுத்து முதியவர் தன்னை ஏன் தாக்கினார்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு இச்சம்பவம் குறித்து அங்கு பணியிலிருந்த வட்டாட்சியரிடம் தெரிவித்ததை தொடர்ந்து முதியவர் என்னை தாக்கியவர் மீதும் நான் கொடுத்த மனுவின் மீதும் நடவடிக்கை எடுக்க எடுக்க கோர நீதி கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரச்சனை செய்த முதியவரை தள்ளிவிட்டு அவரை கடுமையாக தாக்கி வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயற்சி செய்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதியவர் தன்னை வலுக்கட்டாயமாக வெளியேற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் மேலும் தன்னை தாக்கவும் அதிகாரம் இல்லை என முதியவரை தாக்கிய போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டதாக சொல்லப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து தன்னை தாக்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவலர் மீது புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு செல்வதாக தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இச்சம்பவத்தால் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது..
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.