உதகையில் ஏடிஎம் இயந்திரத்தில் துளையிட்டு கொள்ளை முயற்சி : உடைக்க முடியாததால் ரூ.12 லட்சம் ரொக்கம் தப்பியது!!

Author: Udayachandran
30 July 2021, 7:42 pm
ATM Theft Attemplt - Updatenews360
Quick Share

நீலகிரி : உதகை நகர மையப்பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த மர்மநபர்கள் உடைக்க முடியாததால் இயந்திரத்தில் இருந்து ரூ.12 லட்சம் தப்பியது.

உதகை நகரின் மையப்பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் அருகில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை இன்று அதிகாலை வங்கி பணியாளர் ஏடிஎம் இயந்திரம் இருந்த இடத்தை பார்த்த போது ஏடிஎம் இயந்திரம் உடைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனே வங்கிக்கு வந்த அதிகாரிகள் ஏடிஎம் அறையை அடைத்தனர். பின்பு போலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்பு குற்றப்பிரிவு போலீசார் சம்பவ பகுதிக்கு வந்து உடைக்கப்பட்ட இயந்திரத்தை பார்வையிட்டனர்

தீ மூலம் உடைக்கப்பட்ட பகுதியை கண்டு சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றை தடயவியல் நிபுணர்களைக் கொண்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொணடு வருகின்றனர்.

மேலும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.12 இலட்சம் பணத்தை இருந்ததும் கொள்ளையர்கள் திருடமுடியாமல் இயந்திரத்தை சேதப்படுத்தி தப்பியோடியுள்ளனர்.

மேலும் அருகில் உள்ள வணிக வளாகங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். உதகை நகரின் மையப்பகுதியில் ஏடிஎம் இயந்திரம் உடைத்து கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 121

0

0