கோவையில் அதிமுக பிரமுகர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!!

25 December 2020, 12:14 pm
ADMK Suicide Attempt -Updatenews360
Quick Share

கோவை: இந்து அமைப்பை சேர்ந்தவர் மிரட்டுவதாக கூறி அதிமுக பிரமுகர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது .

கோவை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். அதிமுகவை சேர்ந்த இவர், ஆட்டோ ஒட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜீவானந்தம் மனைவி மற்றும் மகள்கள் மற்றும் செல்லப்பிராணி நாய் என குடும்பத்துடன் வந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.

அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். வரதராஜபுரம் பகுதியில் ஜீவானந்தத்திற்கு சொந்தமான 6 செண்ட் நிலத்தை இந்து முன்னேற்ற கழகம் அமைப்பின் மாநில அமைப்பாளர் மணிகண்டன் ஆக்கிரமிக்க முயல்வதாகவும், வீட்டிற்கு வந்து தொடர்ந்து மிரட்டல் விடுப்பதாகவும் ஜீவானந்தம் தெரிவித்தார்.

இதையடுத்து அவர்களை மீட்ட பந்தயசாலை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பத்தினால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Views: - 0

0

0