மதுரையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயற்சி : வாலிபர் கைது

Author: kavin kumar
10 January 2022, 1:34 pm
Quick Share

மதுரை: மதுரையிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு விலை உயர்ந்த போதைப்பொருள் கடத்த முயன்ற வாலிபரை போதை தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மதுரையிலிருந்து இன்று இலங்கைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் விலை உயர்ந்த போதைப் பொருட்கள் கடத்த உள்ளதாக போதை தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின்பேரில் மதுரை விமானநிலையம் வந்த அதிகாரிகள், இலங்கை பயணிகளை தடுத்து நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை வில்லாபுரத்தைத சேர்ந்த ஷகில் அஹமது என்பவரின் உடமைகளை போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர்.அதில் பழைய மண்ணெண்ணெய் அடுப்பில் மண்ணெணெய் இருக்கும் பகுதியில் விலை உயர்ந்த போதை பொருள் இருப்பது தெரியவந்தது.அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டனர். அதில், இது தன்னுடைய இல்லை என்றும் விமானநிலையம் வந்தபோது அறிமுகம் இல்லாத நபர் இலங்கையில் சேர்த்துவிடும்படி சொன்னதன் பேரில் எடுத்து வந்ததாக கூறினார். தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் விசாரிணை செய்து வருகின்றனர்.

Views: - 288

0

0