தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் திருட முயற்சி : கொள்ளையர்களுக்கே ஷாக் கொடுத்த ஏடிஎம் மெஷின்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2022, 11:44 am
Tirupur ATM - Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடத்தில் தனியார் (ஆக்ஸிஸ்) வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டி.எஸ்.பி அலுவலகத்திற்கு எதிரே தனியார் (ஆக்ஸிஸ்) வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் ஒரு பகுதியில் ஏ.டி.எம் செண்டர் செயல் பட்டு வருகிறது.

ஏ.டி.எம் மையத்திற்கு இன்று காலை வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கும்,வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர்.

தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் ஏ.டி.எம் மையத்துக்கு வந்த மர்ம நபர்கள் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இயந்திரத்தில் பணம் வைத்திருந்த பெட்டியை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கை விட்டு திரும்பி சென்றதும் தெரிய வந்தது. மேலும் வங்கி மற்றும் அப்பகுதியிக் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைபற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 643

0

0