சிறுமியை கழுத்தறுத்து கொல்ல முயற்சி : பயந்து போன காதலன் தற்கொலை!!

By: Udayachandran
12 October 2020, 1:58 pm
Kallakuruchi Crime - Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி : ஒரு தலைக்காதலால் 16 வயது சிறுமியை கழுத்தறுத்து கொல்ல முயன்ற காதலன் போலீசுக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அவருடைய வீட்டிற்கு அருகில் வசிக்கும் நாமக்கல்லை சேர்ந்த சதீஷ் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் தொட்டியம் சுண்ணாம்பு ஓடை அருகே சிறுமி கழுத்தில் கத்தி குத்துபட்டு கிடந்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த சின்னசேலம் ஆய்வாளர் ராஜா சிறுமியை தனது வேனிலேயே தூக்கிப்போட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தார்.

இதுதொடர்பாக காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில், சதீஷ் பைக்கில் வந்து சிறுமியிடம் திருமணம் குறித்து பேசியதாகவும், அவர் மறுத்ததால் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியை குத்திவிட்டு பைக்கில் தப்பி ஓடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. கள்ளக்குறிச்சி அருகே உள்ள தொட்டியம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் என்பவர் சென்னை சோலையூர் பகுதியல் வசித்து வருகிறார். கோவிந்தனின் மகளான 16 வயது சிறுமியை வேளச்சேரி பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவன் காதலித்து வந்துள்ளான்.

இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிய வர, சதீஷை கண்டித்துள்ளார் கோவிந்தன். இதனையடுத்து சிறுமி எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வந்த சதீஷ் தனது ஒரு தலைக் காதலை சொல்லியுள்ளான். இதனால் கோவிந்தன் தன்னுடை குடும்பத்தை அழைத்துக் கொண்டு சொந்த ஊரான கள்ளக்குறிச்சி தொட்டியம் பகுதிக்கு வந்து தங்கினர்.

இதையறிந்த சதீஷ் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சிறுமியை பார்க்க தொட்டியம் வந்தார்.
அப்போது சிறுமியை தனியாக அழைத்து பேசியுள்ளான். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப்போக, ஆத்திரமடைந்த சதீஷ் தான் மறைத்து வைத்த கத்தியை எடுத்து சிறுமியை கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடினான்.

இதையடுத்து உயிருக்கு போராடிய சிறுமி அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதன் பின் போலீசார் சதீஷை தேடி வந்த நிலையில், பயந்து போன சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 48

0

0