காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட இளைஞர் : மனஉளைச்சலால் செல்போன் கோபுரம் ஏறி தற்கொலை முயற்சி!!

25 October 2020, 12:41 pm
Suicide Threaten - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து வந்ததாலும் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த நபர் சிப்காட் காவல் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் 60 அடி உயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி  பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன சுமைதூக்கும் தொழிலாளியான கர்ணன் (வயது 32) என்பவர் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் மறுத்ததால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கும்முடிபூண்டி சிப்காட் காவல் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மற்றும் அருகிலேயே உள்ள சிப்காட்  தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து அவரிடம் கீழே இறங்க சமரசம் மேற்கொண்டனர்.

ஆனால் சமரசம் ஆகாத கர்ணன், அவரது தாய் யமுனா மற்றும் உறவினர்களை அழைத்து அவரிடம் சமரசம் மேற்கொண்டு பத்திற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்னர் அவரைக் கீழே பத்திரமாக இறக்கினர்.

தகவல் அறிந்து அப்பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது இந்த நிலையில் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் அவரை கீழே இறக்கி விசாரணை மேற்கொண்டதில் தனது தம்பி கிருஷ்ணா மீது உள்ள வழக்கில் அவரை சிப்காட் காவல் நிலைய போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்றதாகவும் அதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலைக்கு முயன்றதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்னர்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 19

0

0