தலைக்கேறிய போதையுடன் நடுரோட்டில் படுத்து தற்கொலை முயற்சி : கமிஷ்னர் அலுவலகம் முன் பரபரப்பு..!!
Author: Udayachandran RadhaKrishnan12 January 2022, 7:46 pm
கோவை : கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு ஒருவர் போதையில் ரோட்டில் படுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சூலூரை அடுத்த பட்டணம் புதூரை சேர்ந்த சிவராஜ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்த அவர் பேருந்து முன் திடீரென சாலையில் படுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நபரை மீட்டார். முதற்கட்ட விசாரணையில் சிவராஜின் உறவினர் ஒருவர் தாக்கியதால் சிகிச்சைக்கு சென்றதாகவும்,போதையில் சென்றதால் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததால் போதை தலைக்கேறி ஆணையர் அலுவலகம் முன்பு சாலையில் படுத்ததும் தெரியவந்தது.
திடீரென சாலையில் படுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0