பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் டிஜிட்டல் செயலியில் வருகைப்பதிவு : பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2022, 11:18 am
School Education - Updatenews360
Quick Share

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும்.

பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 367

0

0