ஆடி அமாவாசை : பக்தர்கள் தர்ப்பணம் செய்ய தடை.. வெறிச்சோடிய முக்கடல் சங்கமம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 August 2021, 10:26 am
Kumari - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரிப்பால் ஆடி அமாவாசையை முன்னிட்டு மறைந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்ததால் முக்கடல் சங்கமம் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு மறைந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் செய்து புனித நீராட அரசு சார்பில் விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக 16 தீர்த்தங்களைக் கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரி வெறிச்சோடியது – கடற்கரை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் பொதுமக்களை உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ஆடி அமாவாசை தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்கள் நினைத்து வேத விற்ப்பன்னர்கள் மூலம் பச்சரிசி, எள், பூ ,தர்ப்பை ஆகிய பூஜை பொருட்களைக் கொண்டு நீர்நிலைகளில் வந்து பூஜைகள் செய்து புனித நீராடுவது இந்துக்களின் காலம் காலமாக மரபு .

அந்த வகையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு 16 தீர்த்தங்களைக் கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரியில் புனித நீராட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் காரணமாக பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் நேற்று முதலே கன்னியாகுமரி கடல் பகுதி கடற்கரை பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. கன்னியாகுமரிக்கு நுழையும் வாயில் அனைத்தையும் பேரிகார்டுகளை வைத்து தடைசெய்யப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொருஆண்டும் ஆடி அமாவசை நாட்களில் காலையில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் கன்னியாகுமரியில் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டதால் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

அதையும் மீறி வருகை தந்த ஒருசில பக்தர்களையும் போலீசார் அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பினர். மேலும் அவரவர் ஊர்களில் சிறிய குளம் குட்டைகளில் தர்ப்பணம் செய்தனர் சுசீந்திரம் மேம்பாலத்தில் வேத மந்திரங்கள் முன்னோருக்கு திதி கொடுத்து அதனை அருகிலுள்ள குளம் ஆறுகள் தர்ப்பணம் செய்து நீராடி விரதத்தை கடைபிடித்து வருகின்றனர். மேலும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் வெளியே வாயிலில் நின்று சாமி தரிசனம் செய்து பக்தர்கள் சென்றனர்.

Views: - 703

0

0