ரவுடிகளாக மாறிய ஆட்டோ ஓட்டுநர்கள்… கத்தியுடன் சண்டையிட்ட அதிர்ச்சி வீடியோ வைரல்!

Author: Udayachandran RadhaKrishnan
12 செப்டம்பர் 2024, 4:57 மணி
auto Drivers
Quick Share

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த கதிர் மற்றும் உதயசூரியன் ஆகிய இருவரும் காமராஜர் நகர் ஆட்டோ நிறுத்தத்தில் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகின்றனர்.

கதிர் சி ஐ டி யு ஆட்டோ சங்கத்தின் தெற்கு பகுதி செயலாளராகவும், உதயசூரியன் என்பவர் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா ஸ்ரீதர் அணியின் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராகவும் உள்ள நிலையில் ஏற்கனவே இருவருக்கும் இடையே ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது தகறாரு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் இன்று மாலை இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அப்போது உதயசூரியன் கத்தியை கையில் வைத்து மிரட்டிய நிலையில் பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர்.

வாகன போக்குவரத்து அதிகம் இருந்த சூழலில் பொதுமக்கள் நடமாட்டமும் அதிகரித்து காணப்பட்டது. அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி கற்களால் தாக்கி கொண்டதில் இருசக்கர வாகனங்கள் மற்றும் அவ்வழியே நடந்த சென்ற பலரும் காயம் அடைந்தனர்.

இதனிடையே காயம் அடைந்த உதயசூரியன் தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு ஒருவழிப்பாதையில் வாகனங்களுக்கிடையே ஆட்டோவை ஓட்டிச்சென்று அங்கிருந்து தப்பினார்.

மேலும் படிக்க: வீட்டு பணிப்பெண்ணை விடாமல் துரத்திய திமுக பிரமுகர்.. கொலை மிரட்டல் கொடுத்து பாலியல் தொல்லை : பகீர் புகார்!

பின்னர் காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த காட்சியை அப்பகுதியில் இருந்த சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சுந்தராபுரம் காவல் நிலையத்திற்கு வழங்கவே அதன் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் கதிரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் அனுமதித்துள்ள உதயசூரியிடம் விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 183

    0

    0