அதிவேகத்தில் வந்த ஆட்டோ…நிறுத்த சொன்ன காவலர் மீது மோதி தூக்கி வீசப்பட்ட பரபரப்பு காட்சிகள்: ஓட்டுநருக்கு போலீசார் வலைவீச்சு..!!(வீடியோ)

Author: Rajesh
5 April 2022, 4:17 pm
Quick Share

சென்னை: நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின் போது ஆட்டோ ஒன்று காவல் ஆய்வாளர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 3ம் தேதி நந்தம்பாக்கம் எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்துள்ளது.

இதனை தூரத்தில் இருந்து கவனித்த காவல் ஆய்வாளர் பொன்ராஜ், அதிவேகமாக வந்த ஆட்டோவை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளார். காவலர் சைகை காட்டியும் வேகத்தை குறைக்காமல் அதிவேகத்தில் வந்த ஆட்டோ, காவலர் பொன்ராஜ் மீது மோதி தூக்கி வீசிவிட்டு சென்றது.

courtesy

இதையடுத்து, அருகில் இருந்த காவலர்கள் பொன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். 2 நாள் தீவிர சிகிச்சைக்கு பின் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் வீடு திரும்பினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தியு ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Views: - 348

0

0