ரூ.400க்கு தானியங்கி கிருமி நாசினி தெளிப்பான் : 9ம் வகுப்பு மாணவனின் சாதனை!!

Author: Udayachandran
7 October 2020, 6:27 pm
9th Std Student Sanitizer - Updatenews360
Quick Share

கோவை : கிருமி நாசினி தெளிபான் தயாரித்து இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வழங்கிய பள்ளி மாணவனின் செயல் அனைத்து தரப்பினரிடம் இருந்து பாராட்டுகளை குவித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டு வருகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் கைகளை அடிக்கடி கழுவுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடித்தல் உள்ளிட்டவை இன்றியமையாத தேவையாக உள்ளது.

அதோடு எந்த பகுதிகளுக்கு சென்றாலும் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்துவதும் வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. இதனால் தானியங்கி கிருமி நாசி தெளிப்பான் இயந்திரங்கள் தற்போது சந்தைகளில் இடம்பிடித்துள்ளன. அதோடு கூடுதல் விலைக்கும் விற்பனையாகின்றன.

இதனை கருத்தில் கொண்டு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் மகிழன், குறைந்த விலையில் கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரத்தை தயாரித்து அதனை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.

மருசுழற்சி பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த இயந்திரம் மூலம் 5 லிட்டர் கிருமி நாசினியை தன்னுள் வைத்து சென்சாரை பயன்படுத்தி இயங்கவல்லது.

பொதுமுடக்க காலத்தில் பயனுள்ள பொருளை தயாரித்த தன் மகன் அடுத்தது பேட்டரியில் இயங்கும் சைக்கிளை தயாரித்து வருவதாக மகிழனின் தந்தை சண்முகவேல் பெருமையாக கூறினார்.

ஆற்றலால் தானியங்கி கிருமி நாசினி தெளிப்பான் இயந்திரத்தை உருவாக்கியதோடு, அதனை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொடையாக மாணவன் வழங்கியுள்ளதை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Views: - 52

0

0